பருவமழைக்கு முந்தைய வானிலையின் தாக்கம் காரணமாக இன்று தொடக்கம் சில தினங்களுக்கு காற்று, மற்றும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களிலும் வானம், மேகம் சூழ்ந்து காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களிலும் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலை காணப்படும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.