எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய லங்கா சதொச நிறுவனத்தினால் அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனியின் புதிய விலை 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. கடலை ஒரு கிலோ 38 ரூபாயினால் குறைக்கப்பட்டு 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாயினால் குறைக்கப்பட்டு 240 ரூபாவிற்கும் நெத்தலி ஒரு கிலோ 145 ரூபாயினால் குறைக்கப்பட்டு 950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இன்று முதல் குறித்த பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விலைகள்
ஒரு கிலோ சீனி- 250 ரூபாய்
கடலை ஒரு கிலோ- 450 ரூபார்
ஒரு கிலோ பெரிய வெங்காயம்- 240 ரூபாய்
நெத்தலி ஒரு கிலோ 950 ரூபாய்