2024 ஐபிஎல் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று சன்ரைசஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதியிருந்தன.
அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதன்படி, 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்று வெற்றி பெற்றது.
இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.