கடந்த காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்துக்கொண்டு மக்கள் எதிர்வரும் தேர்தலில் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் நடத்தப்பட வேண்டும். அதனை மாற்ற முடியாது. தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கே இருக்கிறது எனவே அரசியல்வாதிகள் அதுதொடர்பில் முடிவெடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
ஆகவே எதிர்வரும் தேர்தலின்போது வரலாற்றில் பாடம் கற்றுக்கொண்டு விழுந்த குழியில் மீண்டும் விழாமல் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு மக்களின் பொறுப்பாகும் என இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
அதனால் எதிர்வரும் தேர்தலில், புத்திசாலித்தனமான தீர்மானம் ஒன்றை எடுப்பதுடன், தேசிய அரசியலில் குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
குறுகிய அரசியல் இலாப நோக்கங்களுடன் செயற்படுபவர்கள் உலக அரசியலிலும் இலங்கை அரசியலிலும் இருக்கின்றனர். மக்களின் உயிர்கள் அரசியல்வாதிகளின் உயிர்கள் தொடர்பில் கண்டுகொள்ளாமல் குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்ளவே சிலர் முயற்சிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மேலும் தெரிவித்தார்.