நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் அவற்றின் உண்மைத் தன்மை ஆராயப்பட்டு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்று 5 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் புதிதாக 478 மதுபானசாலைகளை அமைப்பதற்கு புதிய நிபந்தனைகளின் கீழ் மதுபான உரிமங்களை வழங்குவதற்கான அரசின் தீர்மானத்துக்குமைய இந்த நடவடிக்கை இடம்பெறுவதாகவும் மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே, இவ்வாறான சம்பவம் பதிவு செய்யப்படும் அல்லது முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில் மதுவரி திணைக்களம் உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தரப்பினரும் மதுபானசாலை உரிமத்தினை விற்பனை செய்ய விரும்பினால் அவர்கள் 15 மில்லியன் ரூபாவினை அரசுக்கு செலுத்துவதன் மூலம் இதனைச் செயற்படுத்த முடியும் மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்