ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் தீவிரமாக செயற்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடம் திறப்பதற்காக இன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயம் செய்துள்ளார்.
இந்த நிலையில், காலை 8.30 மணியளவில் குறித்த விபத்து வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றதுடன், இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேக கட்டுப்பாட்டை இழந்த ரிப்பர் வாகனம் வீதி ஓரத்தில் வைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















