ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு பெறப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அமைச்சரவைக்கு தெளிவாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்த்தப்படும். அதன் பின்னரே பொதுத்தேர்தல் நடத்தப்படும்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு பெறப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
அவ்வாறான எந்தவொரு தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது” என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.