அதிக வருமானம் ஈட்டும் துறையாக தேயிலை உற்பத்தித்துறையை மீண்டும் அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் தேயிலையை மீண்டும் உலகத்தரம் வாய்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்காக பல புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
சிலோன் தேயிலை நாமத்தை உலகத்தரம் வாய்ந்தது. இன்று தேயிலை ஏற்றுமதியில் போட்டித்தன்மை அதிகரித்துள்ளது.
மாத்தறை தென்மாகாணத்தை மையப்படுத்தி தரம் வாய்ந்த தேயிலைத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.
தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தேயிலை பயிர்ச்செய்கையாளர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.
தனியார் துறையுடனும் இணைந்து செயற்படுவதன் ஊடாக அதனை வெற்றிகரமாக செயற்பட முடியும்.
இதனூடாக பெண்களுக்கு அதிகளவில் வேலைவாயப்பிiனை வழங்கவும் எதிர்ப்பார்த்துள்ளோம்.
அதிக வருமானம் ஈட்டும்துறையாக தேயிலை உற்பத்திதுறையை மீண்டும் அபிவிருத்திசெய்வதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும்” என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.