சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப் பணிகளைத் தொடருமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.