நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அவசர நிலைகளைத் தெரிவிக்கவும், நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவையானது 24 மணிநேரமும் செயற்படும் எனவும், அனைத்து அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் இதன் ஊடாக இணைக்கப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு வசதிகள் செய்து தரப்படும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலையினால் மண் மேடுகள் சரிந்து அல்லது மரங்கள் முறிந்து, புகையிரத மற்றும் வீதிப் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டால் உடனடியாக பிராந்திய பொறியலாளர்களுக்கு அறிவிக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் முழுமையான அதிகாரம் பிராந்திய பொறியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பொலிஸ், விசேட அனர்த்த நிவாரணப் பிரிவொன்றை நிறுவியுள்ளது.
அதன்படி 011-242 1820 மற்றும் 011-242 1111 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அனர்த்த நிவாரண தேவைகளுக்காக மக்கள அழைக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசர நிலைமைகளின் போது அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் 117, இடர் முகாமைத்துவ நிலையம் 0112136222 அல்லது 0112670002 அல்லது 0112136136 மற்றும் பொலிஸ் 011 2421111 என்ற விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.