நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு மாவட்ட நீதிபதி .சந்துன் விதான முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சாமரி வீரசூரியவிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.
அப்போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜயமுதித ஜயசூரிய, நீதிமன்றில் கோரிக்கை விடுத்து, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.
அதன்படி ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்த நீதிபதி, வழக்கை வரும் 14ம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.