மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்கு தலைவணங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், இந்திய வரலாற்றில் இது ஒரு சாதனை எனவும் மோடி தெரிவித்தார்
அதேவேளை, கடந்த பத்தாண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.