மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அவர் தெரிவித்தது.
மோடி எண்ணிலடங்கா கொடுமைகளை செய்தனர். தேர்தலில் பெரிய அளவில் பணத்தை செலவிட்டனர். இருந்தும் மோடி மற்றும் அமித் ஷாவின் ஆணவம் அவர்களை வீழ்த்தியது. அயோத்தியிலும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது என்றும் பிரதமர் மோடி நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்.
இந்த முறை தேர்தலில் 400+ இடங்களை வெல்லும் என்று கூறிய அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என மம்தா குறிப்பிட்டுள்ளார்.