பிரேசில் நாட்டின் சான்டா கேட்டரினா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை மினாஸ் ஜெராயிஸ் மாநிலம் கவர்னடார் வாலடேர்ஸ் நகரில் இருந்து புளோரியானோ நகர் நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறினால் இவ்விபத்து சம்பவித்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.