உத்தேச மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பாக திட்டமிட்டவாறு நாளை விவாதம் இடம்பெறும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் எதிர்த் தரப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்“உத்தேச மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அதனை ஏற்றுக்கொள்கின்றோம். அதற்கு பதிலாக நாம் வேறு ஒரு சட்டமூலத்தை முன்வைக்க போவதில்லை.
திட்டமிட்டவாறு நாளை உத்தேச மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்று சட்டமூலம் நிறைவேற்றப்படும்” இவ்வாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.