மின்சார விநியோகம், எரிபொருள் வழங்கல் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை வைத்தியசாலைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.