சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை 65 ஆயிரத்து 777 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்து 406 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.