மூன்றாவது தடவையாக இந்திய பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள நரேந்திர மோடியின் பதவி ஏற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் வெற்றியீட்டிய நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வு எதிர்வரும் 08ம் திகதி மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.