கடந்த முதலாம் திகதி முதல் பெய்து வந்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது
இதன்காரணமாக 50,000இற்கும் அதிகமானோர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்
அத்துடன் கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
மேலும் உயிரிழந்தவர்களில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவதானிக்கச் சென்றவர்களும் அதிகளவில் அடங்குவதாகவும் இவ்வாறாக அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் குறித்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.