உத்தேச மின்சாரசபை சட்டமூலத்திற்கு எதிராக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சர்வஜன பலய அரசியல் கூட்டணியின் ஏற்பாட்டில் பத்தரமுல்ல தியத உயன பகுதியில் இன்று முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது பொல்துவ சந்தி அருகில் இருந்து நாடாளுமன்றம் வரை பேரணியை முன்னெடுக்கவிருந்தனர்.
இதன்போது பொலிஸார் அதற்கு தடைவிதித்திருந்ததுடன் இருதரப்பிருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.