கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இம்மாதம் கடந்த 5 நாட்களில் அந்தந்த மாவட்டங்களில் இருந்து 497 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஜனவரி மாதம் முதல் இதுவரை 25,417 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைமையுடன் டெங்கு, தொற்றுநோய் மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என்பதால் நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.