நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான அறிவித்தல் ஒழுக்காற்று சபைக்கு அனுப்பப்பட்டதாகவும், ஒழுக்காற்று சபையின் அறிக்கை தற்பொது கட்சிக்கு கிடைத்துள்ளதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
விஜயதாச ராஜபக்ச இவ்வாறு செயற்பாடகள் கட்சியின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என ஒழுக்காற்று சபை சுட்டிக்காட்டியுள்ளதாக சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எந்தவொரு அரசியல் கட்சியும் தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டாலும் அதனை எதிர்கொள்ள தயார் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.