குழந்தைகளுக்கு எதிரான சட்டங்களை மீறும் படைகளின் பட்டியலில் இஸ்ரேல் ராணுவத்தையும் ஐக்கிய நாடுகள் சபை சேர்த்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு குழந்தைகளை பாதுகாக்க தவறிய குற்றவாளிகள் பட்டியலில் இஸ்ரேல் ராணுவமும் இடம் பெற்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்ததாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதுவர் கிலாட் எர்டன் அறிவித்துள்ளார்.
இந்த பட்டியல் அடுத்த வாரம் ஐ.நா பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்படும்.
மோதல்களில் குழந்தைகள் கொல்லப்படுவது, உதவி கிடைக்காதது, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் ஹமாஸ{க்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.