இந்திய பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதை தொடர்ந்து நாளையும், நாளை மறுதினமும் டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு8 பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகளதெரிவிக்கின்றன.
சமீபத்தில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.
தேர்தலை முன்னிட்டு கடந்த இரண்டரை மாதங்களாக பல்வேறு விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜூன் 4 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே கூட்டணி கட்சிகளுடன் நாளை நரேந்திர மோடி 3வது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இதன் காரணமாக நாளையும், நாளை மறுநாளும் டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
எனவே ஆளில்லா விமானங்கள், டிரோன்கள், உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.