காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றிருந்து.
இன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் சோனியா காந்தியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியாவின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்மொழிந்தார். தொடர்ந்து கௌரவ் கோகோய், தாரிக் அன்வர் மற்றும் கே சுதாகரன் ஆகியோர் ஆதரவு அளிக்க, ஏகமனதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.