சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பழைய சுற்றறிக்கைகளுக்கு அப்பாற்பட்டு புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடுவெல பிரதேச மக்களின் நலன் மற்றும் அந்த மக்களுக்கான நிவாரண வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், மக்களை மீள்குடியேற்றுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.