பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றிற்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சசாகல ரத்நாயக்க, இரு அரச வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் எரிபொருள் பிரச்சினை ஏற்படுவதற்கு முன்னரே, பெற்றோலிய நிறுவனத்தின் கடன் சுமை படிப்படியாக அதிகரித்து, எரிபொருள் பிரச்சினை தோன்றியதன் மூலம், கடன் வேகமாக வளர்ந்தது என இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச வங்கிகளை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அந்தந்த வங்கிகளுக்கு 450 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.