2024 – T 20உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பாகிஸ்தான் அணி கனடா அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
அதன்படி போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதற்கமைய, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.