எதிர்காலத்தில் வாகன இறக்குமதி தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த காலங்களில் கடன் நெருக்கடியை எதிர்கொண்ட போது 16 தடவைகள் சர்வதேச நாணயநிதியத்தின் ஒத்துழைப்பை நாடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
தற்போது, நாடு வெற்றிப்பதையை நோக்கிப் பயணிப்பதுடன், நீடிக்கப்பட்ட கடன்திட்டத்தின் 3 ஆவது தவணைக்கு அனுமதியும் கிடைத்துள்ளது என அவா் குறிப்பிட்டாா்.
ஒப்பந்தத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தாம் கூறவில்லை எனவும், ஒப்பந்தத்தில் மாற்றம் ஏற்பட்டால் மக்கள் பாதிப்படைவதுடன் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லும் என எதிர்த்தரப்பினர் கூறிவருவதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.
ஆனால் சுயலாப அரசியலை நோக்காகக் கொண்டு மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தவே எதிர்த்தரப்பினர் முயற்சிக்கின்றனர் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தொிவித்துள்ளாா்.