விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
தமிழ்த்தலைமைகள் சுய இலாப அரசியலை மேற்கொண்டதால் அவை எமது மக்களுக்கு சாபக்கேடான விடயங்களை ஏற்படுத்தியிருந்தன.
பல தமிழ்த்தலைமைகள் எமது பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனா். இதுவே அவா்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும் துணைபுாிகின்றது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயா் தமிழா்கள் நன்றி தொிவிக்க வேண்டும். ஏனெனில் யுத்தத்தினால் புலம்பெயா்ந்தவா்கள் இன்று பல நாடுகளில் நன்றாக இருக்கின்றாா்கள்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே இலங்கைக்கு இந்திய இராணுவத்தினரை அனுப்பி வைத்ததுடன், தெற்கில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.
அதனை குழப்பியடித்து , தும்பு தடியால் கூட அதனை தொடமாட்டோம் என கூறி குழப்பங்களை உண்டு பண்ணினார்கள். அதன் பின் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும்.
அண்மையில் பழைய நண்பர் சுரேஷ் பிரேமசந்திரன் உடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது, அதன்போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 இனை அமுல் படுத்தி இருந்தால் , இன்றைக்கு தமிழ் மக்கள் எங்கேயோ இருந்திருப்பார்கள் என கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதை போல் இருந்தது.
எமது பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும். சர்வதேச நாடுகள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்குமே தவிர எமது பிரச்சனைகளை தீர்க்க முன் வராது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்லதொரு சந்தர்ப்பம். அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். மக்கள் நலன் சார்ந்து யாரும் சிந்திக்காததால் தான் அதனை தவறவிட்டோம்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக தெற்கில் இருந்து பலரும் வடக்கிற்கு வந்து தமிழ் பிரதிநிதிகள் என சிலரை சந்திக்கின்றார்கள். அவர்களிடம் இவர்களும் அரைவாசியை தா முக்கால் வாசியை தா என கேட்கிறார்கள்.
பின்னர் அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்க்களிடம் கோருகிறார்கள். ஆட்சி அமைக்கப்பட்டதும் , ஆட்சியாளர்களுடன் கூடி குலாவிய பின்னர், இறுதியாக அடுத்த தேர்தல் நெருக்கும் நேரம் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மக்களிடம் கூறுவார்கள்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தொிவித்தாா்.