ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் 2 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
அதன்படி, ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும் எனவும் நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதிப்பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியுள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் எனவும் அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை என்பதால் இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஹிட்லர் செய்த அதே விடயத்தையே ரஷ்ய ஜனாதிபதி செய்வதாகவும், இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார்.