மாகாண சபையை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தொிவித்துள்ளாா்.
லண்டனில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
மாகாண சபையை இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எனினும், இந்த மாகாண சபையானது தங்களுக்கான உரிமை என தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர்.
எனவே, மாகாண சபையை யாரேனும் நீக்குவதாக நினைத்தால் அது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமையை பறிப்பதாக அமைந்துவிடும். இதனால் மீண்டும் தேவைற்ற பிரச்சினைகள் தோற்றம் பெறும்.
ஆகவே, தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கி, தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான புதிய வழியை கண்டறியும் வரை, மாகாண சபை முறைமைய அவ்வாறே முன்னெடுத்துச் செல்லப்படும்.
எனினும், இதுவொரு தற்காலிக தீர்வாக அமையுமே தவிர, நிரந்தரத் தீர்வாக அமையாது.
இதேவேளை, பெருந்தோட்ட மக்களின் காணி, வீடு, கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் நாங்கள் உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு மலையகம் என்ற கொள்கைளை வெளியிட்டுள்ளோம்.
அனைத்து பிரச்சினைகளும் அதிகாரப் பகிர்வை மையமாகக் கொண்டே நகர்கின்றன. ஆகவே, தற்போதுள்ள மாகாண சபை முறைமையை அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
பொது மக்களிடமிருந்தே எமக்கு அதிகாரம் கிடைக்கின்றதுடன், அந்த அதிகாரத்தை பயன்படுத்துவற்கான வரையறைகளையே அரசியலமைப்பே எமக்கு வழங்குகின்றது.
ஆகவே, மக்களின் நம்பிக்கையில் எமக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்துவற்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சின்றமையானது, முடிந்தளவுக்கு இனவாதத்தை தோற்கடிப்பதற்காகும். இனவாதம் அவ்வாறே இருக்குமாக இருந்தால் நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம்.
எனவே, நாங்கள் ஆட்சிக்கு வரும் போது இனவாதம் தோல்வியுற்றிருக்கும்” என அனுரகுமார திசாநாயக்க மேலும் தொிவித்தாா்.