உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் இன்னும் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் மின்சார கட்டமைப்புகள் மீது ரஷ்யா அடிக்கடி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது உக்ரைன் நாட்டின் 2 ஆவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதன்படி, கார்கிவ் நகர் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் நிலையில் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 19 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் வசிக்கும் கட்டடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இடைவிடாமல் எரிசக்தி மற்றும் மின்சாரம் உற்பத்தி கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் மின்சார உற்பத்தி திறனை இழந்துள்ளது.
நேற்றிரவு வரை 16 ஏவுகணைகள் மற்றும் 13 ட்ரோன்கள் மூலம் எரிசக்தி மீது 8 தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.