ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்படும் காலம் 10 வருடங்களை கடந்த பின்னரும் அதற்கு ஒரு வருட செல்லுபடியாகும் காலம் வழங்கப்படுமாயின் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்படும் வரை மாத்திரமே அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, நவம்பர் முதலாம் திகதி முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரணக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் விரைவாக இலத்திரனியல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.