பதிவாளர் நாயக திணைக்கள அதிகாரிகள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி நாடளாவிய ரீதியில் காணி பதிவாளர்கள் மற்றும் மேலதிக பதிவாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பதிவாளர் சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தருணத்தில் நாட்டுக்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.