நைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள குவோசா நகரில், நேற்றைய தினம் அடுத்தடுத்து 3 இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சி, மருத்துவமனை மற்றும் இறுதிச்சடங்கு என மூன்று இடங்களிலேயே இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இக்குண்டு வெடிப்பில் சிக்கி 48 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்த தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.