பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலையும் சில புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன
கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்
இதேவேளை வேலை நிறுத்தம் காரணமாக நேற்று பல புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்பட்டதோடு ஒரு சில புகையிரதங்கள் மட்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்
மேலும் இந்த பணிப்புறக்கணிப்பால் பெம்முல்ல புகையிர நிலையத்திற்கு அருகில் பயணி ஒருவர் புகையிரத தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த புகையிரத்தில் இருந்தே அவர் நேற்று மாலை தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.