பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் உட்பட சுமார் ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பதவி விலகியவா்களாகக் கருதி அவா்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த கடிதங்களை அச்சிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று காலையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.