நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி காங்கசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் கடற்பரப்பை அண்மித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 1 தொடக்கம் 20 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
அத்துடன் கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0-2.5 மீற்றர் வரை உயரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கடற்றொழில் மற்றும் கப்பற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.