புதிய மின் கட்டணத் திருத்தத்திற்கு இணைந்தவகையில், நீர் கட்டணத்தைக் குறைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மின் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தமைக்காக அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கு பாராட்டுத் தெரிவித்த ஜீவன் தொண்டமான் இந்த வாரத்துக்குள் நீர் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படுமெனவும் எனவும் தெரிவித்திருந்தார்.