நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்துள்ளது.
நேபாளத்தின் தலைநகரமான காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த சௌரியா ஏர்லைன்ஸ் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானமானது பயணத்தைத் தொடங்கிய சிலமணிநேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.