கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், 1983 ஆம் ஆண்டு ஜூலை படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 அரசியற் கைதிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் யூலை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.