நெடுந்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமற் போயுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவர்கள் குழுவொன்றை கைது செய்யச் சென்ற போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது நான்கு மீனவர்கள் கடலில் விழுந்துள்ளதாக அதில் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டு புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.