இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் குரோதி வருட மகோற்சவ பெருவிழா இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த மகோற்சவ பெருவிழா இன்று மாலை 4.30 மணியளவில் வைரவர் உற்சவத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படிஇ இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை 27 நாட்கள் இந்த மகோற்சவ பெருவிழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில்இ கொடியேற்றம் 9 ஆம் திகதியும் இரதோற்சவம் செப்டம்பர் முதலாம் திகதியும் இடம்பெறவுள்ளன.
இதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது.
குறித்த வீதித் தடை செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.
வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும் என்பதுடன் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.