கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் புகையிரதத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மலையக புகையிரதத்தின் ஹட்டன் மற்றும் ரொசெல்ல நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதை இன்று அதிகாலை தடைப்பட்டதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்
அதன்படி சுமார் ஐந்து மணிநேரம் புகையிரத சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்
மேலும் இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்ட கொழும்பு பதுளை இரவு அஞ்சல் புகையிரதம் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு தொழில்நுட்ப கோளாறு சீர் சேய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது