ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன் ஒப்பந்தம் ஒன்றும் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டது.
ஐக்கியமான நாட்டில் அனைவருக்கும் வெற்றி என்ற தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று காலை ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இந்தக் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் மனோ கனேசன்,தொழிலாளர் தேசிய சங்கம் சார்பில் திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி, சார்பில் இராதாகிருஷ்ணன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் ரவூப் ஹக்கீம், மக்கள் குரல் சார்பில் அர்ஜூன ரணதுங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.