ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற சின்னங்களில் இருந்து இரு சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நாய் மற்றும் பன்றி சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 22 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீண்ட வாக்குச் சீட்டுகளை வடிவமைப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, கவலை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.