ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 20 சட்ட மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையத்திற்கு இது போன்ற 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சட்ட மீறல்கள் தொடர்பான எஞ்சிய முறைப்பாடுகள் 9 மாவட்ட தேர்தல் அத்தியச்சகர் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் 157 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தன்று ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு திட்டம் குறித்து இங்கு ஆலோசிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.