இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 35 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் பயணித்த 4 படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
மன்னார் தீவை அண்மித்த தென் கடல் பகுதியில் வைத்து குறித்த இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் நேற்றையதினம் அதிகளவிலான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இரண்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டடு வந்த நிலையில் அண்மைக்காலமாக 30ற்றும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.