பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு ஓவியர் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
”ரகசிய ஓவியர்“ என லண்டன் மக்களால் அழைக்கப்படும் குறித்த ஓவியரின் உண்மையான பெயர் பேங்ஸி (Banksy).
இவர் சுவர்களில் ஸ்பிரேக்களைக் கொண்டு ஓவியம் வரைவதில் கைதேந்தவர். 1990 ஆம் ஆண்டில் இருந்து இவர் ஸ்பிரே ஓவியங்களை வரைந்து வருகின்றார்.
இவரது ஓவியங்கள் அரசியல் நயாண்டி, பாசிசம், முதலாளித்துவ எதிர்ப்பு, காலநிலை மாற்றம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகின்றன.
இவர் பொதுவாக இரவு வேளைகளில் ஆள் அரவம் அற்ற நேரத்திலேயே தனது அடையாளத்தை மறைத்து ஓவியங்களை வரைந்து வருகின்றார்.
இவரது தனித்துவம் வாய்ந்த ஓவியத்தினால் இவருக்கு ஹொலிவூட் பிரபலங்கள் உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவரது ஓவியங்களுடன் ஆர்வத்துடன் புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இவரது முகத்தினை பார்க்க முடியாதா? என்ற ஏக்கத்திலேயே பலர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தன்னுடைய படைப்புகளை இன்ஸ்டா, யூ டியூப் தளங்களில் பதிவேற்றம் செய்து வரும் பேங்ஸி, இன்று வரை தன்னுடைய அடையாளத்தை மட்டும் வெளிக்காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.